• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நடிகர் ரஜினிகாந்த்க்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

ByA.Tamilselvan

Dec 12, 2022

முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.