• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பெங்களூர் பயணம்

ByA.Tamilselvan

May 18, 2023

கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்கிடையே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார்.