• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செங்கல்பட்டு அரசு மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட முதல்வர்..!

Byவிஷா

Apr 26, 2023

செங்கல்பட்டு பரனூரில் இயங்கி வரும் அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பரனூரில் அரசு மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை சந்தித்தார். அப்போது மறுவாழ்வு இல்லத்தில் உள்ள 109 முதியவர்களுக்கு புடவை, லுங்கி, போர்வைகளை மற்றும் நல திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் இருந்து சாலை மார்கமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கள ஆய்வுக்கு செல்லும் போது தீடீரென செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதியவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கலைஞர் கருணாநிதிக்கு பிறகு இந்த பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் எந்த முதல்வரும் நேரில் வரவில்லை, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும், மேலும் முதல்வரிடம் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததாகவும் மறுவாழ்வு மையத்தில் இருப்போர் தெரிவித்துள்ளனர்.