• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி..,

Byஜெ.துரை

Jun 10, 2026

1977-ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி, ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம்வந்த பாரதிராஜா, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார். பாரதிராஜாவின் மறைவு செய்தி அறிந்த திரையுலகை சேர்ந்த பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாரதிராஜாவின் மறைவுச் செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், உடனடியாக நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்றார்.

அங்கு மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.