அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளது குறித்து ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
துபாயில் எக்ஸ்போ நடந்து வரும் நிலையில் எக்ஸ்போவை பார்வையிடவும், மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவரை அழைத்து செல்ல துபாய் அரசு பிஎம்டபிள்யூ காரை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் முதல்வரின் துபாய் பயணம் குறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது அவரது சொந்த பயணத்திற்காகவா என்பது தெரியவில்லை. திறமையற்ற நிர்வாகம் தமிழகத்தை ஆண்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.