• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்

ByA.Tamilselvan

Jan 25, 2023

இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார்.இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்றுமுன்தினம் கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.