திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வரும் வழியில் சென்னை புறப்பட இருந்தது இதற்காக திண்டுக்கல்லில் இருந்து மதுரை திருப்பரங்குன்றம் வெங்கல மூர்த்தி நகர் நான்கு வழி சாலை நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது திடீரென முதல்வரின் கார் டயர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலை தடுமாறிய முதல்வரின் கார் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு, மற்றொரு கார் மூலமாக மதுரை விமான நிலையம் வந்தார்.
மதுரை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.
திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சி முடித்துவிட்டு மதுரை திருப்பரங்குன்றம் வெங்கல மூர்த்தி நகர் நான்கு வழி சாலை நெடுஞ்சாலை வந்து கொண்டிருந்த முதல் வாகனம் திடீரென பழுதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் வாகனத்திற்கு அரிய தற்போது காவல் வாகனம் போடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எந்த காயங்களும் இன்றி மதுரை விமான நிலையம் வழியாக விமானம் மூலம் முதல்வர் சென்னை புறப்பட்டு சென்றார்.. பின் எதிரே சன் மாருதி என்னும் ஒர்க் ஷாப் உரிமையாளர் அழகு சுந்தர பாண்டி ஒர்க்ஷாப்பில் இருந்து ஜாக்கி உள்ளிட்ட டயர் மாற்றுவதற்கான விபரங்களை கொண்டு வந்து மாற்று டயர் பொருத்தி பின் வாகனம் சென்றது இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பரபரப்பாக காணப்பட்டது




