• Fri. Apr 26th, 2024

கேப்டனுக்கு பிறந்தநாள் … வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி மற்றும் கனிமொழி..

Byகாயத்ரி

Aug 25, 2022

நடிகரும் தேமுதிக தலைவரமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு கால்பதித்த இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் அவரது நூறாவது படமாக அமைந்தது.

இப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில் அன்றிலிருந்தே இவர் கேப்டன் விஜயகாந்த் என்றே அழைக்கப்பட்டார் . சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த இவர் தனது பார்வையை அரசியல் பக்கம் திருப்பினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் , 2011 ஆம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ேஇதையடுத்து அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து கிடைத்தது . 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும் , எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் இருந்து வந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார். இதன் பிறகு அரசியல் வாழ்க்கையில் பல சறுக்கல்களை சந்தித்த விஜயகாந்த் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதன் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி அவ்வபோது தனது தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வருகிறார். தற்போது அவர் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருப்பதாகவும் அவரது மனைவி பிரேமலதா கூறி இருப்பது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *