• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி செய்தவருக்கு முதல்வர் நேரில் பாராட்டு…

Byகாயத்ரி

Dec 17, 2021

பெரம்பலூர் மாவட்டத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குரங்கை காப்பாற்றுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்ட கார் ஓட்டுனரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

பெரம்பலூர் அடுத்த ஓதியம் சமத்துவபுரம் கிராமத்தில் 5 நாய்கள் கடித்து குரங்கு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனை கண்ட கார் ஓட்டுநர் பிரபு, குரங்கிற்கு முதலுதவி அளித்து அதன் உயிரை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து அவரை பாராட்டியிருக்கிறார்.

குரங்கு சுயநினைவு பெற்ற பிறகும் தன்னை கடிக்காததை சுட்டிக்காட்டிய அவர், வனவிலங்குகளிடம் அன்பு பாராட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வனவிலங்கை துன்புறுத்தாமல் இருப்பதே அவற்றுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி என்றும் பிரபு வலியுறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.