• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மழையால் பாதித்த மக்களுக்கு ரூ.1000/- முதல்வர் உத்தரவு…

Byமதி

Nov 12, 2021

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியாக தலா 1,000 ரூபாய் வழங்க ஆந்திரா முதல்வர் உத்தரவிட்டார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து நேற்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் தாக்கம், தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.

கடந்த 4 நாட்களாக இப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தமிழக எல்லையை ஒட்டியுள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.

தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் ஜெகன் பேசும்போது, “தாழ்வான இடங்களில் வெள்ளம் அதிகரிக்கப்பதற்கு முன் அங்குள்ள மக்களை முகாம்களில் தங்க வையுங்கள்.

அத்தியாவசிய தேவைகளை தடையின்றி வழங்குங்கள். வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து உள்ள குடும்பங்களுக்கு உடனடியாக 1000 ரூபாய் வழங்குங்கள். சாலையில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்துதல், சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்தல் ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்” என உத்தரவிட்டார்.