• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

ByP.Kavitha Kumar

Mar 26, 2025

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர் ஏராளமானார் நேற்று இரவு முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மனோஜின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கும் ஆறுதல் கூறினார். அவருடன்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் மனோஜ் உடலுக்கு தவெக தலைவர் விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, மணிரத்னம், சந்தான பாரதி, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும், நடிகர்கள் சிவகுமார்,தியாகராஜன், சரத்குமார், கவுண்டமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 4.30 மணியளவில் அவரது மனோஜின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.