• Thu. Apr 24th, 2025

வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் பேச்சு…

BySeenu

Mar 26, 2025

கோவை மலுமிச்சாம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் இயக்குனர் அருண்குமார் இயக்கிய வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன், ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர்.மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விக்ரம்,மற்றும் நடிகை துஷாரா,

நாளை மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வீர தீர சூரன் படம் வெளியாகிறது.காலி கலைவாணி ரொமான்ஸ் காக இந்த படத்தை பாருங்கள்.காதலித்தால் மட்டும் போதாது பாதுகாக்க வேண்டும்.காதல் என்பது மிக முக்கியம் அவங்களுகாக கேர் பண்றது ரொம்ப முக்கியம்,அதற்காக இந்த படத்தை பாருங்கள்.சாமி படத்தில் பண்ணுன ரொமான்ஸ் , இந்த சாமி கூட நான் பண்ணிட்டேன்..இது ஒரு ரொமான்டிக் படம் அதற்காக பாருங்கள்.

இந்த படத்தின் ஸ்பெசல், ஆரம்பமே வேற மாதிரி இருக்கும். இதுவரை நடித்த படத்தை விட இந்த படம் நன்றாக இருக்கும்.கல்லூரியில் படிக்கும் போது நான் ரொம்ப நல்ல பையன்.நான் சிறுவனாக இருக்கும் போது வாடகை வீடு தான், நான் சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன்,சாதித்து விட்டேன்.ஒரே வாழ்க்கை,

எனக்கு ஒரே ஒரு கனவு தான் இருந்தது, நடிகையாக ஆக வேண்டும் என ஆகிவிட்டேன். எனக்கு சிறுவயதில் கால் உடைந்து கட்டுடன் சென்று தேர்வு எழுதி முதல் ஆளாக வந்தேன்.

நடிகர் துரு விக்ரம்,எப்படி இருக்கார் என்ற கேள்விக்கு பதில் அளித்த விக்ரம்,நடிகர் என்று சொன்னால் நான் பதில் சொல்ல மாட்டேன் .அவர் எனக்கு போட்டி,என்னுடைய பையன் நன்றாக இருக்கான் என விக்ரம் தெரிவித்தார்.

தொடர்ந்து விக்ரம் மற்றும் துஷாரா ஆகியோர் மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு நடனமாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.