• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பண்பாடு மற்றும் திறன் திருவிழா..,

BySeenu

Feb 20, 2026

கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி “KASCARNIVAL 2026” பண்பாடு மற்றும் திறன் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.மாணவர்கள் தங்களின் கலை மற்றும் தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்துவதற்கான விழாவின் முதன்மை நோக்கமாகும்.

அதனை தொடர்ந்து கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்ற நேரடி இசை நிகழ்ச்சியில் Super Singer புகழ் புன்யா பங்கேற்று கல்லூரி மாணவ மாணவர்கள் முன்னிலையில் பாடல்கள் பாடி அசத்தினர்.இதனைக் கண்ட கல்லூரி மாணவ,மாணவிகள் உற்சாகமாக நடனமாடி காண்பவரை கவர செய்தது.

மேலும் போட்டிகள் அனைத்தும் படைப்பாற்றல்,புதுமை, தொழில்நுட்பத் துல்லியம் ஆகிய அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. தனிநபர் நடனம்,குழு நடனம்,தனிநபர் பாடல்,குழு பாடல்,மைம்,அட்சாப் (Adzap), டப்ஸ்மாஷ் போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.