• Sun. Oct 5th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்..

ByA.Tamilselvan

Aug 30, 2022

திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
திருவனந்தபுரத்தில் வருகிற 3-ந்தேதி 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கிறார்கள். மேலும் லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள 30-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து 2-ந்தேதி காலை 11 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அன்றைய தினம் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தனியாக சந்தித்து பேசுகிறார்.