• Mon. Apr 21st, 2025

நெல்லை இருட்டு அல்வா கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தென்னக மாவட்டத்தில் குறிப்பாக மதுரைக்கு தெற்கே நெல்லை சீமை என தனித்த புகழை பெற்றது திருநெல்வேலி மாவட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி, தென்காசி என தனி, தனி மாவட்டங்கள் உருவானதால் திருநெல்வேலி 5_ சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே கொண்ட ஒரு சிறிய மாவட்டமாக மாறி விட்டாலும், திருநெல்வேலி என்ற பெயரும் அதன் நிலப்பரப்பும் வரலாற்று புகழ் பெற்றது.

கிறிஸ்தவ மிஷனரி மக்களுக்கு கல்வியை கற்பிக்க பிரதானமாக தேர்வு செய்த பாளையம் கோட்டையில் உள்ள பல கல்லூரிகளில் புனித ஜோசப் கல்லூரி தென்னகத்தின் “ஆக்ஸ்போர்டு”என்ற பெருமை பெற்ற கல்லூரி.

நெல்லையில் கல்விக்கு அடுத்த அடையாளம் இருட்டு கடை அல்வா.

அருள்மிகு காந்திமதி அம்மன் கோவிலின் எதிரே ஒரு சிறிய அல்வா கடை. பல தலைமுறைக்கு முன் ராஜஸ்தான் மாநிலத்தில் வந்தவரால் தொடங்கப்பட்ட கடையில்.அன்று மின்சார விளக்கு இல்லாத காலத்தில், கடையில் மாலை நேரத்தில் ஒரு “காண்டா” விளக்கு அந்த கடையின் ஓரத்தில் ஒரு தூணில் பொருத்தியிருந்தாலும் போதிய வெளிச்சம் இல்லாமல், வெளியே இருந்து பார்த்தால் கடையின் உட் பகுதி இருட்டாக இருந்ததால், பொதுமக்கள் வைத்த பெயர் இருட்டு கடை என்பதுடன், இருட்டு கடை அல்வா என அல்வாவும் இருட்டோடு ஒட்டிக்கொண்டு, எல்லோராலும் இருட்டு கடை அல்வா என மக்களின் பேச்சு வழக்கில் வந்துவிட்டது.

இருட்டு கடை அல்வா வாங்க மாலை நேரத்தில் கூடியிருக்கும் கூட்டத்தில் பெரும் பகுதி மக்கள் ஒரு வாழை இலைத் துண்டில் 0.50_கிராம் அல்வாவை வாங்கி கையில் வைத்தே சுவைத்து சாப்பிடும் காட்சியை இன்றும் காணலாம். அந்த கடையில் அல்வாவை எடை போடுபவர் இடம். நாம் எடையை சொன்னதும் கரண்டியால் தராசில் வைக்கும் அல்லாவின் எடை அப்படியே துல்லியமாக இருப்பது மற்றொரு அதிசயம். எத்தனை முறை எடையை மாற்றி கேட்டாலும், அவரது கை எடையில் அப்படி ஒரு துல்லியம்.(தராசுக்கு வேலையே இல்லை)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பெப்ரவரி_6,7-ம் தேதிகளில் நெல்லை மாவட்டம் ஆய்வு பணியின் போது.நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வும் பொது மக்களின் மத்தியில் நெல்லையை கடந்து தமிழகம் முழுவதும் மக்களின் பேசு பொருளாகி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணத்தின் பல்வேறு பரிணாமங்களாக மக்கள் மத்தியில் பரவுகிறது.

நெல்லை என்றால் அல்வா (அகாராதியில் இல்லாத பொருள்”அல்வா”)

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் இரவு நேரத்தில் அமைச்சரவை சக அமைச்சர்கள். திருநெல்வேலி பொருப்பு அமைச்சர் கே.என்.நேரு மற்றும் துரைமுருகன் உடன் என்று திடிரென்று. நெல்லையப்பர் கோயில் முன் இருக்கும் இருட்டு கடைக்கு சென்றார். முதல்வர் தங்கள் கடைக்கு வந்திருப்பதை கடையின் உரிமையாளர் ஹரிசிங், அவரது மனைவி கவிதாவால் சில நொடிகள் நம்பவே முடியாத பதட்டத்தில் இருந்தவர்கள் இயல்பு நிலைக்கு வந்து முதல்வரை கும்பிட்டு புன்னகையுடன் வரவேற்று முதல்வர் கேட்க்கும் முன்னே சுவைக்க அல்வாவை எடுத்து விழம்பினார்கள்.

முதல்வர் இருட்டு அல்வா கடை அதிபரிடம் வியாபாரம் எப்படி உள்ளது. அவர்களது குடும்பத்தார் நலம், அண்மையில் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற மண விழாவின் மணமகள் நலம் பற்றியெல்லாம் விசாரித்த முதல்வர், ஆன்லைனில் அல்வா வியாபாரம் நல்ல நிலையில் உள்ளதா என கேட்டறிந்தார்.

கடையில் உட்கொண்ட அல்வாவிற்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் முதல்வர் வாங்கிய அல்வா பார்சலுக்கும் பணம் கொடுத்துவிட்டு, அங்கு கூடியிருந்த பெரும் கூட்டத்தினரிடமும் நலம் விசாரித்து விடைபெற்றார்.

இருட்டு கடை அல்வா உரிமையாளர்களிடம் அவர்கள் கடைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தது அலுவா வாங்கியது பற்றி கேட்ட போது. எங்கள் கண்களையே எங்களால் நம்ப முடிவில்லை. கடந்து போன முதல்வருடனா அந்த நொடிகள். நனவா,கனவா என நம்ப முடியவில்லை என சொன்னாலும் அந்த வடநாட்டு தம்பதிகள் முகத்தில் உன்னதமான மகிழ்ச்சியை காண முடிந்தது.

நெல்லை வந்த முதல்வரை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் ஆகியோர் சந்தித்து புத்தகம் வழங்கினார்கள்.