1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு, கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.
இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை வழங்கும் விதமாக முதலில் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். கடந்த பத்தாண்டு காலமாக கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தற்போது 1089 கால்நடை உதவி மருத்துவர்கள் பணியிடங்களுக்கான இடங்கள் நிரப்பப் பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர்.