நாடாளுமன்ற தொகுதி மறுவரையரை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை தொடர்பான முதல் கூட்டுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் முதல்வர்கள் தெலுங்கானா மாண்புமிகு முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில மாண்புமிகு துணை முதல்வர் டி. கே சிவகுமார் ஆகியோரை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்று இக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மகேஷ் குமார் கௌடு மற்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் தமிழக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அவரது நன்றிகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் எம் எஸ் காமராஜ் உட்பட பலர் காங்கிரஸ்
பொருப்பாளர்கள் பங்கேற்றனர்.