• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

செஸ் ஒலிம்பியாட்.. டிக்கெட் புக் பண்ண இணையதள முகவரி

ByA.Tamilselvan

Jul 13, 2022

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலம் தொடங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக, பூஞ்சேரியில் உள்ள ‘போர் பாயிண்ட்ஸ்’ அரங்கத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதில், 188 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான அறிவிப்பை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 2 அரங்கில் போட்டிகள் நடைபெறுவதால், தனித் தனியாக டிக்கெட் விற்பனை செய்யப்படவுள்ளது.முதல் இடத்திற்கு ரூ.300 முதல் ரூ.3,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2வது இடத்திற்கு ரூ.200 முதல் ரூ.2,000 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் https://tickets.aicf.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.