• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடல்..!

Byவிஷா

Jun 19, 2023

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிண்டி சிறுவர் பூங்கா இன்று ஜூன் 19 முதல் 6 மாதங்களுக்கு மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவதற்கும் மாற்றி அமைக்கவும் ஆறு மாதங்கள் வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கூறி அரசு உத்தரவிட்டுள்ளது.