தமிழகத்தில் மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தொழில்துறை அமைச்சரிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை உழவர்நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து, தொழில்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகம் தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.