• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாளை நிலவை நெருங்கும் சந்திராயன் : கவிஞர் வைரமுத்து ட்விட்டர்..!

Byவிஷா

Aug 22, 2023

நாளை சந்திராயன் விண்கலம் நிலவை நெருங்க உள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியானது தனியாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், உந்துவிசைக் கலனும் லேண்டர் பகுதியும் தனியாகப் பிரிந்த நிலையில், இரண்டும் தனித்தனியாக தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
உந்துவிசைக் கலனில் இருந்து, தனியாக பிரிக்கப்பட்ட ‘விக்ரம்’ லேண்டர், நிலவை சுற்றிவரும் நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதையின் முதல் டீபூஸ்டிங் முறையில் சற்று குறைக்கப்பட்து லேண்டர் பகுதியின் சுற்றுப்பாதை நிலவுக்கு நெருக்கமாக 113 கிமீ ஒ 157 கிமீ தொலைவில் கொண்டு வரப்பட்டது. இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. ஒ 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 18:04 மணி (6 மணி) அளவில் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் நிகழ்விற்காக நாடே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான் நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம் லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல்வியல்ல் விஞ்ஞானத் தோல்வி சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல் மானுட வெற்றி ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற’ என பதிவிட்டுள்ளார்.