• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சந்திரமுகி 2 ஷூட்டிங் அப்டெட்!!

தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு திரைப்படங்களின் பகுதி இரண்டு தயாராகி வருகிறது.

அப்படி 2005-ல் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், சந்திரமுகி. இதில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேல் என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். பி.வாசு இந்த படத்தை இயக்கி இருந்தார்.
மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகையாக, அருந்ததி’, ‘பாகமதி’ போன்ற திகில் படங்களில் படங்களில் நடித்த அனுஷ்கா நடிக்கிறார். வடிவேலுவை இப்படத்தில் நடிக்க வைக்க இப்படக்குழு முயற்சி செய்யப்பட்டு வந்தநிலையில் அவரும் சமதித்துள்ளார்.

படப்பிடிப்பை விரைவில் தொடங்கப்படும் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது