• Fri. Dec 13th, 2024

நீர் மேலாண்மை, கச்சதீவு மீட்பு, கருவேல மரங்கள் அழிப்புக்கு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் சந்திர பிரபா ஜெயபால் வாக்குறுதி

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திர பிரபா ஜெயபால் தேர்தல் பரப்புரைக்காக சாயல்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு வருகை தந்தார்.

முன்னதாக சாயல்குடி பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து சாயல்குடி பெரிய பள்ளிவாசல் சென்று ஜமாத் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். பள்ளிவாசலுக்கு வருகை தந்த வேட்பாளர் சந்திரபிரபா ஜெயராஜ்-க்கு ஜமாத் நிர்வாகத்தினர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த சந்திரபிரபா ஜெயராஜ்..,

மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வான கச்சத்தீவு மீட்பு என்பதை கள நிலவரம் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் உள்ள நீர் மேலாண்மை திட்டங்கள் தெளிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர் ஆதாரங்களுக்கு பிரச்சனையான காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வாறுகால் வசதி செய்து ராமநாதபுரம் தொகுதியை வளர்ச்சி மிகு மாவட்டமாக மாற்ற பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும் எனவும் தெரிவித்தார். இந்த பிரச்சார பயணத்தில் நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.