• Thu. Jan 23rd, 2025

காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்திற்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த இஸ்லாமிய மக்கள்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை முன்னிட்டு குளச்சல் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் போது, மாநில பொதுக்குழு உறுப்பினர் யூசுப் கான், நகர தலைவர் சந்திர சேகர், மீனவர் அணி நிர்வாகி ஸ்டார்வின், லாலின் மற்றும் குளச்சல் நகரமன்ற தலைவர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.