• Fri. Jan 24th, 2025

கன்னியாகுமரியில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு. அதிகாரிகள் சோதனை பரபரப்பு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 17_வது வார்ட் காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு பகுதியில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரி மற்றும் காவலர்கள் வாக்கு சேகரிப்பு நபர்கள் கொடுத்த துண்டு பிரசுரங்களை வாங்கி சோதனை செய்த போது, சம்பந்தப்பட்ட வார்ட் முன்னாள் கவுன்சிலர் தாமஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துண்டு பிரசுரங்களை ஏன் சோதிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கை பேசியில் வந்த புகார் துண்டு பிரசுரங்களுடன் பணம் கொடுப்பதாக புகார் வந்ததால் சோதனை மேற்கொண்டதாக தெரிவித்தனர். சீருடை அணிந்த காவலர்கள் வந்து சோதனை இட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.