• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

25 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

Byகாயத்ரி

Aug 30, 2022

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல்,திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நீலகிரி ,கோவை, திருப்பூர், தேனி ,ஈரோடு ,சேலம் ,நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் புதுச்சேரி , காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.