• Sat. Jun 14th, 2025
[smartslider3 slider="7"]

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலைமையம் தகவல்

ByA.Tamilselvan

Mar 11, 2023

தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலைமையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12.03.2023 முதல் 14.03.2023 வரை: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-34 டிகிரி செல்ஸியஸ் அளவிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியஸ் அளவிலும் இருக்கக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென்று அறுவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.