• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

Oct 22, 2024

தமிழகத்தில் தெற்கு திசையில் கர்நாடக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கனமழைக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதே நேரம் தெற்கு திசையில் கர்நாடக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நிலவி வருகிறது.
இதன் விளைவாக தமிழக்தில் சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.
அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தென்காசி, கரூர் மற்றும் புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மணி வரை லேசான இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.