• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

Byகாயத்ரி

Oct 1, 2022

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.