• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள்..,

ByS. SRIDHAR

Aug 25, 2025

டபுள் டிராப், டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் ஜூனியர், ஆண், பெண்கள், மாஸ்டர்ஸ், சூப்பர் மாஸ்டர்ஸ், சூப்பர் சீனியர் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் நடைபெற்று வரும் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடும் வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக தென் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று உள்ளனர்.

ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜா ராஜகோபால தொண்டைமான், செயலாளர் பிருத்வி ராஜ் தொண்டைமான், பொருளாளரும் திருச்சி முன்னாள் மேயர் சாரு பாலா தொண்டைமான், துணை பொருளாளர் ராதா நிரஞ்சனி, தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க தலைவர் டிவிஎஸ் ராவ், செயலாளர் வேல் சங்கர், போட்டி இயக்குனர் ரவிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் வழங்கப்பட உள்ளது. இன்று நடைபெற்ற போட்டிகளை பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார் மேலும் துப்பாக்கியால் சுற்றும் இலக்குகளை சரியாக சுட்டு அசத்தினார்.