ராயல் புதுக்கோட்டை ஸ்போட் ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பில் 51வது தமிழ்நாடு மாநில அளவிலான சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டையில் இன்று தொடங்கியது.

டபுள் டிராப், டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுகளில் ஜூனியர், ஆண், பெண்கள், மாஸ்டர்ஸ், சூப்பர் மாஸ்டர்ஸ், சூப்பர் சீனியர் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் வருகிற 28ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடும் வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக தென் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இன்று தொடக்க நிகழ்ச்சி யில் போட்டிகளை திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி. ஜோஷி நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜா ராஜகோபால தொண்டைமான், செயலாளர் பிருத்வி ராஜ் தொண்டைமான், பொருளாளரும்திருச்சி முன்னாள் மேயர் சாரு பாலா தொண்டைமான், துணை பொருளாளர் ராதா நிரஞ்சனி, தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க தலைவர் டிவிஎஸ் ராவ், செயலாளர் வேல் சங்கர், போட்டி இயக்குனர் ரவிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு போட்டியில் பிருத்வி ராஜ் தொண்டைமான் கலந்து கொண்டார்.
இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கம் வழங்கப்பட உள்ளது.