• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ்கள்

Byஜெ.துரை

Jan 22, 2023

குடியரசு தினத்தை முன்னிட்டு அகில இந்திய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு ஆவடி போக்குவரத்து இணை ஆணையர் ஜெயலட்சுமி சான்றிதழ்களும் கோப்பைகளையும் வழங்கினார்.


குடியரசு தினத்தை முன்னிட்டு 10வது அகில இந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் இருந்து தேர்வு செய்த இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி என மொத்தம் ஐந்து மாநிலங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.வயது மற்றும் எடை பிரிவின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.இதில் ஆவடி போக்குவரத்து இணை ஆணையர் ஜெயலட்சுமி கலந்து கொண்டு வீரர் வீராங்கனைகளை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.