• Fri. Apr 26th, 2024

தூங்கும் மூஞ்சி அரசாக ஸ்டாலின் அரசு விளங்குகிறது -முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி பேச்சு

Byதரணி

Jan 22, 2023

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 21 வார்டுகளிலும் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆரின்106 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பி தங்கமணி கலந்து கொண்டு கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் மற்றும் ஏழை எளியவருக்கு அன்னதானங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசும் பொழுது
திமுக ஆட்சி நிர்வாக சீர்கேடுகள் கலெக்சன் கமிஷன் கரெக்ஷன் என்று சென்று கொண்டிருப்பதாகவும் மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு விலைவாசி உயர்வு மற்றும் தொழில்கள் இல்லாமல் விசைத்தறிகள் கைலான் கடைக்கு சென்று கொண்டிருக்கிறது. கொரோனா காலங்களில் மின் கட்டணம் உயர்த்த மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக இந்த நேரத்தில் கடுமையான மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் எங்கு பார்த்தாலும் கள்ள மது கஞ்சா மற்றும் பெண்கள் வெளியே தனியாக சென்று வர முடியாத சூழல் உள்ளது. மளிகை கடை,பெட்டிக்கடை,செல்போன் கடை,பாத்ரூமில் கூட கள்ள மது விற்கப்படுகிறது பல்வேறு கூட்டங்களில் பேசியும் இந்த காவல்துறை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது எதையும் கண்டுகொள்ளாத தூங்கும் மூஞ்சி அரசாக ஸ்டாலின் அரசு விளங்குகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இரட்டை இலைக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெல்ல வேண்டும் என்று அனைவரும் உறுதி ஏற்க கேட்டுக் கொண்டனர்.


விழாவில் நகரக் கழகச் செயலாளர் பி எஸ் வெள்ளிங்கிரிபேரவைச் செயலாளர் டி கே சுப்பிரமணி நகர துணை செயலாளர் ஜெய்கணேஷ்,பொருளாளர் சிவகுமார் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் இணை செயலாளர்மீரா வாசுதேவன் கே கே செல்வராஜ் மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா ஆலம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை துணைச் செயலாளர் சுரேஷ்குமார் நகர மன்ற உறுப்பினர்கள் சரவணன் ஜெயா வைத்தி சம்பூரணம் செந்தில் சுரேஷ் சுஜாதா மாரிமுத்து ராஜா கிளைக் கழக செயலாளர்கணேசன் ராதாகிருஷ்ணன் தண்டபாணி சிதம்பரம் ஜெமினி ராஜேந்திரன் நடேசன் குட்டி என்கிற கந்தசாமி கோபால் கணேசன் எஸ் எஸ் முருகன் ஆபீஸ் ஆறுமுகம் அங்கு ராஜ் சக்திவேல் மேஸ்திரி சுப்பிரமணி கவிராஜ் சம்பூரணம் சோமன் மற்றும் மாரிமுத்து பாசறை செயலாளர் வடிவேல் தகவல் தொழில்நுட்ப பிரிவு சரவணன் மணிகண்டன் விஜயராகவன் மோகன் கோவிந்தராஜா ரங்கன் ஜிம் ரமேஷ் நகர கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் அவர்களின் ரத்தத்தின் ரத்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *