• Mon. Apr 21st, 2025

தையல் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ்

ByKalamegam Viswanathan

Mar 27, 2025

பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல் இணைந்து கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய இலவச தையல் பயிற்சி 3 மாதம் நடைபெற்றது. பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்பாளையத்தான் பட்டியில் நடைபெற்றது. சி.எஸ்.ஆர் திட்ட அலுவலர் சுஜின் தர்மராஜ் தலைமை தாங்கினார்.
உதவி அலுவலர் வெங்கடாச்சலம் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது, உதவி அலுவலர் வெங்கடாச்சலம் பேசியதாவது:-
பயிற்சிக்கு பின் சுய தொழில் முனைவராக மாறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளது. சந்தைப்படுத்துதல் , நிறுவனங்களில் பணிபுரிதல் மானியத்துடன் வங்கி கடன் பெறுவது தரம் உயர்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்காக விற்பனை கூடங்கள் மாவட்டம் ஊராட்சி வாரியாக அமைப்பது பற்றியும் விளக்கமாக கூறினார்.
பெட்கிராட் அலுவலர்கள் சாராள் ரூபி, மீனாட்சி பயிற்சியாளர் மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.