• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சிமெண்ட் கலவை லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலை நசுங்கி பலி..,

ByKalamegam Viswanathan

Mar 27, 2025

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் வழியாக இரவு 9 மணி அளவில் ரயில்வே நிலைய கட்டுமான பணிக்கு அங்க வந்து கொண்டிருந்த ஒப்பந்த கலவை லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பெரியார் பேருந்து நிலையம் பாலம் ஏறும் வழியில் இரு சக்கர வாகனத்தில் சுமார் 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக கலவை லாரி அவர் மீது மோதியது இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுக்கி பலியானார். தகவல் இருந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் கடந்து சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியுடன் சென்றனர்.