• Mon. Mar 24th, 2025

மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம்… 56வது உதய தின விழா..!

ByKalamegam Viswanathan

Mar 10, 2025

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 56வது உதய தின விழா கொண்டாடப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை சிறப்பு ஒத்திகையும், அதனை தொடர்ந்து காயம் பட்டவர்களை மீட்பது குறித்தான ஒத்திகையும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துகுமாருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

மதுரை நிலையத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படை முகாமில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் 56 வது உதய தினத்தை முன்னிட்டு, அதிவிரைவு அதிரடிப்படை வீரர்களின் விமான நிலைய பாதுகாப்பு ஒத்திகை, வெடிகுண்டு தடுப்பு வீரர்களின் அதி நவீன கருவிகளின் சோதனை, மோப்ப நாய்களின் நுண்ணறிவு சோதனை அணிவகுப்பு மரியாதை விழா நடைபெற்றது.

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மதுரை விமான நிலைய துணை பொது மேலாளர் ஜானகிராமன் மதுரை விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அலுவலர் செல்வம், முதன்மை கண்காணிப்பாளர் ஜோதி முருகன், அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

56வது உதய தின விழாவில் மத்திய தொழில் பாதுகாப்புபடை துணை கமாண்டர் விஸ்வநாதன் தலைமையில் வீரர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1969 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் விமான நிலையங்கள் நவரத்தின அந்தஸ்து பெற்ற தொழிற் கூடங்கள் பாதுகாக்கும் பொருட்டு ராணுவத்தின் துணை அமைப்பாக மத்தியத் தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம் உயர்நீதி மன்றம் போன்றவற்றிலும் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவற்றில்
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.