• Sun. Apr 28th, 2024

குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் “சாகர் பராக்கிராம் யாத்ரா”குழுவினர் ஆய்வு…

இந்திய அரசின் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த ஆய்வு பணிக்காக குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து கடந்த ஆண்டு ( மார்ச் _2.03.2022)ல் தொடங்கிய கடல் வழி பயண குழுவினர் கடலில் 36,000ம் கிலோமீட்டர் பயணத்தில் 59 வது நாளில் (ஆகஸ்ட்_31)ம் நாள் குமரி மாவட்டம் தேங்கபட்டணம் மீன் பிடி துறைமுகம் வந்தனர்.

அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் . திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கப்பலில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்தனர்.

தேங்காப்பட்டண கடல் பரப்பில் சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால்.கப்பலில் இருந்து விசை படகிற்கு மாறுவதற்கு இரண்டு மணிநேரம் கால தாமதம் ஆனது.காற்றின் வேகம் அடங்கும் வரை அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா,எல்.முருகன், அதிகாரிகள் குழுவினர் காத்திருந்தனர்.

காற்றின் வேகம் சகஜ நிலைக்கு வந்த பின் குழுவினர் கப்பலில் இருந்து ஒரு நாட்டிகல் தூரத்தில் இருக்கும் துறை முக பகுதிக்கு படகில் வந்து சேர்ந்தனர்.

கடலில் சூறாவளி காற்றின் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் கிராமங்களுக்கு கடல் வழி பயணம் என்ற திட்டம் சாலை வழியாக மாற்றப்பட்டது.

தேங்காய்ப்பாட் டணம், குளச்சல், முட்டம்,வாணியக்குடி,குறும்பனை, நிறைவாக கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரி கலையரங்கில் மீனவர்களுக்கு”கிசான் கடன் அட்டை வழங்குவது என நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தது.

நிகழ்வில் திட்டமிடபட்டிருந்த அனைத்து மீனவகிராமங்களிலும் உள்ள மீனவ குழுக்களை அமைச்சர்கள் குழு சந்தித்து அவர்களது கோரிக்கை மனுக்களை வாங்கியதுடன். மீனவர்களின் நலன் கருதி ஒன்றிய அரசின் பல்வேறு திட்ட ஆய்வுகள் குறித்து தெரிவித்தனர்.

சாகர் பராக்கிராம் யாத்ரா குழுவினர் இடம் தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில் தெரிவித்த கருத்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *