கன்னியாகுமரி கோவளம் சூரிய அஸ்தமனம் பகுதியில் பெங்களூரா மஞ்சு ஸ்ரீ டெக்னோ பார்கில் வேலை செய்யும் ஊழியர்கள் 10 பேர் இன்று(3.9.23) காலை 09.00 மணியளவில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ராட்சத அலை 3 பேரை இழுத்துச் சென்றதில், 2 ஆண் (மணி 38, பெங்களூர் மற்றும் சுரேஷ் 35, பெங்களுர்) இறந்துள்ளார். மேலும் 1 பெண் (பிந்து 28, பெங்களூர்) கடலில் தத்தளித்த வரை கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் திரு. நவீன் அவர்கள் தலைமையில் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மரணம் அடைந்த மணி, சுரேஷ் இருவர் உடல்களும் மருத்துவ கூராய்வுக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிட் அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ மனை என்றாலும் ஞாயிறு கிழமை உடல் கூராய்வு நடைபெறாது என்ற நிலையில்.பெங்களூராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மரணமடைந்த இருவர் உடலை பெறுவதற்கு காலதாமதம் ஆகும் என்ற கவலையில் உடன் வந்தவர்கள் உள்ளனர்.