• Mon. Oct 14th, 2024

கிறிஸ்தவ நிர்வாக பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்திடம் வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு மிரட்டி பணம் கேட்ட இந்து சேவா மாவட்டத்தலைவர்.

நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தென் இந்திய திருச்சபையின் நிர்வாக பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகளிடம் நாங்கள் மோடியின் ஆட்கள் வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு பணம் தா என மிரட்டல் தொனியில் இருவர் கேட்க மூன்றாமவர் வேடிக்கை பார்த்த நிலையில் நிற்க.

பாலிடெக்னிக் நிர்வாகி நீ யார்.? எங்களிடம் பணம் கேட்க…. வெளியே விரட்ட வந்த மூவரில் இருவர் நாங்கள் மோடியின் ஆட்கள் பணம் தருவாயா, இல்லையா என கேள்வி எழுப்பினார்கள்.

நிர்வாகம் மாவட்டம் பாஜக தலைவர் தர்மராஜ் அல்லது நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி வந்து கேட்கட்டும் நாங்கள் கொடுக்கிறோம் என சொல்லி பாலிடெக்னிக் வளாகத்தை விட்டு மூவரும் வந்த வாகனத்துடன் வெளியே விரட்டியது. இந்து சேன மாவட்ட தலைவர் உடன் வந்த மூவர் மீதும் வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் புகாரின் அடிப்படையில் மூவரையும் கைது செய்ய வடசேரி காவல் நிலைய காவலர்கள் தேடி சென்ற நிலையில் மூவரில் ஒருவரான பிரதீஷ் காவலர்களிடம் சிக்க, இருவர் தலைமறைவான நிலையில், பிடிபட்ட இந்து சேவாவை சேர்ந்த பிரதீஷ்யை நாகர்கோவில் சிறையில் அடைக்க காவலர்கள் அழைத்து வந்த போது. சிறைச்சாலைக்குள் போக மறுத்து சிறைவாசலில் அமர்ந்த நிலையில் காவலர்கள் பிரதீஷ்யை இழுத்து சென்று சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவர் என்று கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்ற கேள்வி பணம் கேட்டு மிரட்டிய காட்சியை பார்த்த பாலிடெக்னிக் பணியாளர்களின் மத்தியில் கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *