• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை.. பிரதமர் மோடி அதிரடித்திட்டம்

ByA.Tamilselvan

Jun 14, 2022

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பெருமளவு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலரும் வேலைவாய்ப்பை இழந்தனர். வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி விமர்சித்து வருகிறது. மேலும் 2024 ல் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் வாக்காளர்களை கவரும் விதமாக இந்த அறவிப்பினை பிரதமர் வெளியிட்டுள்ளார்
இந்நிலையில் பிரதமர் மோடி, அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை ஆய்வு செய்து, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இதனை மிஷன் மோட் எனப்படும் வேக கதியில் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதாவது இதை விரைந்து முடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்தோர் மற்றும் புதிதாக பட்டம் பெறுவோருக்கு பெரும் வாய்ப்பாக அமைய உள்ளது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்தார். அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்துவது அரசால் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.