முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் இன்று திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக வடக்கு ஒன்றிய நகர கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா இன்று கறம்பக்குடி சீனிகடை முக்கம் பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கடைவீதியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர்.
மேலும் கலைஞரின் புகழ் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர செயலாளர் முருகேசன், இளைஞர் அணி அமைப்பாளர் பரூக் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.