• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் ஆயுதபூஜை சிறப்பு பூஜைகள் நடத்தி கொண்டாட்டம்!..

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரில் வாகன பழுது பார்ப்பு கூடம், விற்பனையகம், இரும்பு பட்டறைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் காலை முதலே ஆயுத பூஜை கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

தாங்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை தூய்மை செய்து அவற்றிற்கு சந்தனம், குங்குமம், பூக்கள் மற்றும் வாழை மரங்கள் வைத்து அலங்கரித்து தாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு இயந்திரங்கள் முன்பும் தனித்தனியாக வாழை இலையை வைத்து, பூ, பழம், தேங்காய், பொறி உள்ளிட்டவற்றை படையலாக படைத்து கற்பூரம் காட்டி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொரிகடலைகளை வழங்கி சிறப்பாக ஆயுத பூஜையை கொண்டாடினர்.