பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளரான அமுதா ஐஏஎஸ், தமிழக அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மீண்டும் தமிழக பணிக்கு திரும்புகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த 1994ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பெரியசாமி. 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது பருவமழை நிவாரணத்திற்கான சிறப்பு அதிகாரியாக களத்தில் இறங்கி மிகவும் சிறப்பாக செயல்பட்டார். பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த சூழலில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு பணியிலிருந்து அமுதா ஐ.ஏ.எஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் தமிழகப் பணிக்கு திரும்புகிறார். மேலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டவர். செங்கல்பட்டில் சட்டவிரோத மணல் குவாரிகளையும் தடுத்து நிறுத்தியவர். மேலும், ஐஏஎஸ் அதிகாரி அமுதா தருமபுரி ஆட்சியராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.