
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் 51 வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டத்தில் மாவட்ட பொருப்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் தலைமையில் தவெகவினர் விஜய் பிறந்தநாளை பொது மக்களுக்கு தலைக்கவசம் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து புத்தூர் ரவுண்டானவில் இருந்து இருச்சக்கர வாகனத்தில் பேரணியாக வந்து அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விஜயின் 51 வது பிறந்தநாளில் அவரது கட்சியினர் பொது மக்களுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது வரவேற்பை பெற்றுள்ளது.
