• Thu. Dec 5th, 2024

திமுகவில் புகைச்சலை ஏற்படுத்திய ‘கவனிப்பு’

Byவிஷா

Nov 23, 2024

அரியலூரில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றியச் செயலாளர்களுக்கு வாகனம் கொடுத்ததைப் போல, எங்களுக்கும் கொடுப்பார்களா என விழுப்புரம் மாவட்ட ஒன்றியச் செயலாளர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்ட ஆய்வுப் பணிக்காக வந்த போது கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அப்போது அரியலூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் 13 பேரின் கட்சிப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஜீப்களை பரிசளித்தார் ஸ்டாலின்.
இது கட்சித் தலைமையின் கிஃப்ட் எனச் சொல்லப்பட்டாலும் மாவட்டச் செயலாளரான அமைச்சர் சிவசங்கர், தேர்தல் சமயத்தில் ஒன்றிய செயலாளர்களை ‘தெம்பாக’ வைத்துக்கொள்வதற்காக செய்து கொடுத்த ‘சிறப்பு’ ஏற்பாடு இது என்கிறார்கள்.
இதுவரை எந்த மாவட்ட அமைச்சரும் ஒன்றிய செயலாளர்களுக்கு இப்படி தாராளம் காட்டவில்லை என்பதால் சிவசங்கரின் ‘சேவை’ இப்போது மற்ற மாவட்டங்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் முதல்வர் ஆய்வுக் கூட்டத்துக்கு வந்தால் நமக்கும் நிச்சயம் ‘கவனிப்பு’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஷயம் தெரிந்த ஒன்றியங்கள் வழிமேல் விழிவைத்து முதல்வருக்காக காத்திருக்கிறார்கள்.
28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர். இது பவர்ஃபுல் அமைச்சர் பொன்முடியின் கோட்டை. போதாதுக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அவரது மைந்தன் கவுதமசிகாமணி தான் இருக்கிறார். தெற்கு மாவட்டத்தில் 20 ஒன்றிய செயலாளர்கள் இருக்கிறார்கள்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருப்பதால் ஒன்றிய செயலாளர்களுக்கு எதுவும் பெயர வாய்ப்பில்லை. அதேசயம் தெற்கு மாவட்டத்தில் கவுதமசிகாமணி இருப்பதால் ஒன்றிய செயலாளர்கள், ‘இப்ப இல்லைன்னா எப்ப…’ என்று உற்சாகத் துள்ளலில் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக வெளிப்படையாக யாரும் பேசவில்லை என்ற போதிலும், கோலியனூர், காணை, விக்கிரவாண்டி ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், “நம்ம மாவட்டச் செயலாளர் செய்யுறதுக்கு என்ன…” என்று தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டத்தைப் போல நம்ம மாவட்டத்திலும் ஒன்றிய செயலாளர்களுக்கு வாகனம் வழங்கும் வளமான திட்டம் ஏதும் இருக்கா என கவுதமசிகாமணியிடம் கேட்டதற்கு, “அதற்கெல்லாம் வாய்ப்பில்லீங்க. நம்ம மாவட்டம் மிகப் பெருசு. இங்க இருக்கிற ஒன்றியச் செயலாளர்கள் எதையும் எதிர்பார்க்காம மிகச் சிறப்பாவே செயல்படுறாங்க” என்றார்.

Related Post

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆன்னி மேரி ஸ்வர்ணா உள்துறை இணைச் செயலாளராக நியமனம்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *