• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காரைக்குடி அருகே மானகிரியில் நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயம்.., சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக நின்று ரசித்த பார்வையாளர்கள்..!

காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயத்தினை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரியில் இளைஞர்களால் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 70 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில், பெரிய மாட்டிற்கு 8 கிலோமீட்டரும், சின்ன மாட்டிற்கு 6 கிலோ மீட்டரும் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பெரிய மாட்டில் சிவகங்கை மாவட்ட ஜோடி மாடுகளும், சின்ன மாட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட மாடுகளும் முதலாவதாக வந்து முதல் பரிசினை தட்டிச் சென்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், ரொக்கபரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டிபந்தயத்தை ஏராளமான பார்வையாளர்கள் சாலைகளின் இருபுறங்களிலும் திரளாக நின்று கண்டு ரசித்தனர்.