சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

55 கிலோ எடை பிரிவில் இருந்து 85 கிலோ பிரிவு வரையிலான 11பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் ஆணழகனை தேர்ந்தெடுத்தது. இப்போட்டியில் பார்வையாளராக பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் தேர்வானவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.