கொச்சி அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம்..!
பெண் தொழில் அதிபர் கொடுத்த புகார் தொடர்பாக கேரளாவில் உள்ள அமலாக்க துறையினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நகைக்கடை உள்பட பல்வேறு தொழில்…
தடுப்பூசிக்கு ‘நோ’ என்றால் பள்ளிக்கும் ‘நோ’- கேரள அரசு திட்டவட்டம்
‘தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க முடியாது. இது மாணவர்களின் பாதுகாப்பு பிரச்சனை என்பதை அவர்கள் உணர வேண்டும்’ என, கேரள அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக…
மக்களவையில் 3 வேளாண் சட்டங்கள் ரத்து
வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று ஒன்றிய அரசு கூறியது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய…
சிறப்பு கட்டண ரயில் இயக்கம்..மக்கள் மகிழ்ச்சி
சபரிமலை விழா மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நாகர்கோவில் மற்றும் கேரள மாநிலம் கொல்லத்துக்கு முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து…
டெல்லியில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் அடைந்தது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் காற்று மாசு கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. எனவே இது தொடர்பான பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நேரடியாக…
கொவிட்-19 அண்மைத் தகவல்
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 122.41 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. . குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.34 சதவீதம்; 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிக அதிக அளவு. கடந்த 24 மணி நேரத்தில் 9,905 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,08,183என அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொவிட்…
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 137 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 137 கோடிக்கும் மேற்பட்ட (1,37,01,65,070) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 24.61 கோடிக்கும் மேற்பட்ட (24,61,87,131) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 122.41 கோடியைக் கடந்தது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 42,04,171 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 121.41 கோடியைக் (1,22,41,68,929) கடந்தது. 1,26,81,072 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,905 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர்…
கொரோனா பரிசோதனைக்கு பயந்து தெறித்து ஓடிய வடமாநிலத்தவர்கள்
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களை போலவே வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு…
மக்களவை ஒத்திவைப்பு…நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சலசலப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில்…



