தொடரும் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்கள்…
தொழில்முனைவோராக்கும் வணிக வைபவ் நிகழ்ச்சி..,
கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிக வைபவ் என்னும் விற்பனைத் திருவிழா நடைபெற்றது. மாணவிகள் சுயதொழில் வல்லுனர்களாக உருவெடுக்க செய்முறைப் பயிற்சியாகவும் அவர்களுக்கான விற்பனை வாய்ப்பாகவும் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு…
முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் முன்னோடிகளுக்கான பாராட்டு விழா..,
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தால் முன்னோடிகளுக்கான பாராட்டு விழா பூ.சா.கோ தொழில்நுட்பக் கல்லூரியின் நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. 1955 ஆம் ஆண்டு பி.இ இயந்திரப் பொறியியலில் முதல் பட்டதாரியும், புது தில்லியின் இந்திய…
வாக்காளர் பட்டியல் வெளியீடு- 6.5 லட்சம் பேர் நீக்கம்..,
கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகரியுமான பவன்குமார் இன்று வெளியிட்டார். அதில் எஸ்ஐஆர் (SIR) பணிகளுக்கு முன்பு, கடந்த 27-10-2025 நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்…
முற்போக்கு அமைப்புகள் முற்றுகை போராட்டம் அனைவரும் கைது..,
கோவை கவுண்டம்பாளையத்தில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி சார்பில் இன்று நடைபெற உள்ள சரஸ்வதி நாகரிகம் குறித்த கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு முற்போக்கு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன. சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி…
இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு..,
கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ரைசெட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் கான்க்ளேவ் 2025’ எனும் பாதுகாப்பு, பொருளாதாரம் பற்றிய 3-நாள் மாநாடு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு வளாகத்தில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில்…
தி.மு.க தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி !!!
கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் குறித்து பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். சிலர் புதிதாக வந்து கோவையை “மஞ்சள் நகரம்” என கண்டுபிடித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.…
அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்..,
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷஃபிக் அஹமது:- பல மாநிலங்களில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கும் முயற்சியாக உள்ள சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive…
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன்..,
கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் விஜயின் வருகை எந்த அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்த தாக்கத்தையும்…
தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு..,
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விஜய் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்திற்கு பயணிகள் தவிர,…






