குறள் 210:
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். பொருள் (மு.வ): ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.பொருள் (மு.வ):ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று.பொருள் (மு.வ):தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.பொருள் (மு.வ):எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.பொருள் (மு.வ):துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்
குறள் 205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.பொருள் (மு.வ):யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.பொருள் (மு.வ):பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
குறள் 203:
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். பொருள் (மு.வ): தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.பொருள் (மு.வ): தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.பொருள் (மு.வ): தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.








